சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. துபை நகரில் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் இதனை கொண்டாடினாலும், இந்த தொடரில் நடந்த சில தவிர்க்க இயலாத விஷயங்கள் சர்வதேச கிரிக்கெட் வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்.