கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி 10 சதவீதமாக அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழகம் 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம் மட்டுமே. மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால் தற்போது இந்தியா – இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.