இஸ்லாமாபாத்: ராஜதந்திர ரீதியாக இந்தியா உடனான பதற்றத்தை தணிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அவரது அண்ணனும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் அறிவுரை வழங்கி உள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகையான ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், "பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் ராஜதந்திர அணுகுமுறையின் மூலம் தணிக்கப்பட வேண்டும் என்று தனது சகோதரரும், தற்போதைய பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப்புக்கு நவாஸ் ஷெரீப் ஆலோசனை வழங்கியுள்ளார்.