வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
“இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சார்ந்து அமெரிக்க அரசு நிர்வாக ரீதியாக முக்கிய பங்காற்றியது. இரு தரப்புக்கும் வர்த்தக ரீதியான அழுத்தம் கொடுத்து போரை தவிர்க்கச் செய்தோம். இந்தப் போர் நிறுத்தம் நிரந்தரமானதாக இருக்கும் என கருதுகிறேன். சனிக்கிழமை அன்று இதை செய்தோம். இதன் மூலம் அணு ஆயுதங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே போரை தடுத்து நிறுத்தினோம். அது நடக்காமல் போயிருந்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.