பாகிஸ்தானில் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார் மற்றும் அமைப்பை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கி அழித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 412 புள்ளிகளை இழந்து 80,334 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டி-50 குறியீட்டெண் 141 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,273 புள்ளிகளில் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.90% மற்றும் 1.05 % சரிந்தன.