இந்தியாவின் முதல் மரபணு திருத்தம் செய்யப்பட்ட செம்மறியாடு சமீபத்தில் ஒரு வயதை நிறைவு செய்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி காஷ்மீரில் பிறந்த இந்த செம்மறியாட்டிற்கு ‘தர்மீம்’ (Tarmeem) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மாற்றம் அல்லது திருத்துதல் என்பதைக் குறிக்கும் அரபு வார்த்தை.

