இஸ்லாமாபாத்: இந்தியாவின் பல இடங்களில் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. அந்தக் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் பொறுப்பற்ற பிரசாரத்தின் ஒரு பகுதி என்றும் கூறியுள்ளது. நேற்று முன்தினம் இரவில், ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகளைத் தாக்கும் பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் முறியடித்தது.
இந்த நிலையில்,பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதான்கோட், ஜெய்சல்மர் மற்றும் ஸ்ரீநகர் மீது தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தானை குற்றம் சாட்டி, இந்திய ஊடகங்கள் பரப்பும் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்த கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, அரசியல் ரீதியான நோக்கம் கொண்டவை. பாகிஸ்தானை அவதூறு செய்வதை நோக்கமாகக் கொண்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
The post இந்தியாவில் நடந்த டிரோன் தாக்குதலில் தொடர்பு இல்லை: பாகிஸ்தான் மறுப்பு appeared first on Dinakaran.