மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 19, 23, 25-ம் தேதிகளில் பெர்த், அடிலெய்டு, சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. ஐந்து டி20 போட்டிகள் அக்டோபர் 29 (கான்பெர்ரா), அக்டோபர் 31 (மெல்பர்ன்), நவம்பர் 2 (ஹோபார்ட்), நவம்பர் 6 (கோல்ட் கோஸ்ட்) மற்றும் நவம்பர் 8 (பிரிஸ்பன்) ஆகிய தேதிகளில் நடைபெகிறது.
இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டி 20 தொடரின் முதல் 2 ஆட்டங்களில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. கேப்டன் பாட் கம்மின்ஸ் முதுகு வலி காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் ஒருநாள் போட்டித் தொடருக்கும் மிட்செல் மார்ஷ் கேப்டனாக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி 20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார்.