மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிப்புடன், மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.