மகாராஷ்டிராவின் ஓளரங்காபாத் மாவட்டத்தின் வறண்ட நிலப்பரப்பில் ஒரு அற்புதமான, ஆனால் பாழடைந்த கல்லறை ஒன்று உள்ளது. இது சாதாரண கல்லறையல்ல. கல்லறை இருந்திருக்கவேண்டிய இடத்தில் 15 மிட்டர் நீளம் மற்றும் 8 மீட்டர் அகலமுள்ள பள்ளம்தான் இருக்கிறது. இந்த கல்லறையின் சிறப்பம்சமே ஓட்டோமான் துருக்கி பாணியில் கட்டப்பட்ட அதன் குவிமாடம் தான்.