தமிழில் வரவேற்பைப் பெற்ற ‘பெருசு’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.
மார்ச் 14-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பெருசு’. இப்படம் மல்டிப்ளக்ஸ் திரையரங்க ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், பல்வேறு பிரபலங்களும் இதன் காமெடி காட்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்கள். தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் விற்கப்பட்டு இருக்கிறது.