சென்னை: “இந்துக்கள் ஆன்மிக மாநாடு நடத்துவதில் இந்த அரசு என்ன குறை கண்டது. ஏன் இந்துக்களின் மீது இத்தனை வன்மம்..?” என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்துக்களின் நியாயமான வழிபாட்டு உரிமைகளையும், ஆன்மிக விழாக்களையும் ஒடுக்குவதில் சட்டத்திற்கு புறம்பான அனைத்து வழிமுறைகளையும் தமிழக அரசு பின்பற்றி வருகிறது. திண்டுக்கல் ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தர்கள் குழு அறக்கட்டளை சார்பில் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சமுதாய இயக்கங்களும் ஒன்றிணைந்து வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி "அன்னை அபிராமி புகழ் ஓங்க… ஆன்மிக மாநாடு" நடத்த உள்ளனர்.