சென்னை: “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு காவல் துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நடத்தியது. அதில் 2,665 நபர்கள் இரண்டாம் நிலை காவலர்களாக பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும்” என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு காவல் துறைக்கு இரண்டாம்நிலை காவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நடத்தியது. அதன்படி 2665 நபர்கள் (வழக்கமான – 2598 (ஆயுதப்படை பெண் – 779 மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆண் – 1819) மற்றும் (பின் தங்கிய – 67 (ஆயுதப்படை பெண் – 13, ஆயுதப்படை ஆண் – 12 மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆண்கள்-42) இரண்டாம் நிலை காவலர்களாக பணியமர்த்தப்பட்டனர்.