சென்னை: சென்னை பல்லவன் இல்லம் போக்குவரத்துக்கழக பணிமனை அருகே இரு கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேரை காவல்துறை கைது செய்தது. இரு தரப்பு மாணவர்கள் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராயப்பேட்டை கல்லூரி மாணவர்கள் 3 பேர், நந்தனம் கல்லூரி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் ஏழு பேரை கைது செய்துள்ளனர். கத்தி, கற்கள் வைத்திருந்ததால் ராயப்பேட்டை தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சிறையில் அடைத்தனர்.
The post இரு கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்: 7 பேர் கைது appeared first on Dinakaran.