சென்னை : உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ள நிலையில், போருக்கு முன் ரூ.100ஆக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ.200ஆக விற்பனையாகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 40 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் போரின் தாக்கம் மற்றும் பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலித்து வருகிறது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை நிலை இல்லாமல் இருப்பதால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலையை விட இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பக்கா ஸ்கெட்ச் போட்ட இந்தியா.. நடுநிலையால் “மெகா ஆஃபர்” கொடுத்த ரஷ்யா..இந்த விலைக்கு கச்சா எண்ணெயா?
உக்ரைன் போர்
இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ள நிலையில், போருக்கு முன் ரூ.100ஆக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ.200ஆக விற்பனையாகிறது. தற்போதுள்ள சூழலில் சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெயின் விலை பொதுவாக சூரியகாந்தி எண்ணெயை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் சூரியகாந்தி எண்ணெயின் உலகளாவிய உற்பத்தி ஆலிவ் எண்ணெயை விட ஏழு மடங்கு அதிகமாக உள்ளது என்று இத்தாலிய ஆலிவ் எண்ணெய் பிராண்டான பிலிப்போ பெரியோவின் U.K தலைவர் வால்டர் ஜான்ரே கூறுகிறார்.
சூரியகாந்தி எண்ணெய் விலை
ஆனால் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சூரிய காந்தி எண்ணெயின் தேவை மற்றும் உபயோகம் ஆலிவ் எண்ணெயைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. தற்போதுள்ள சூழலில் உலகளாவிய சூரியகாந்தி எண்ணெய் விலை கடந்த ஆண்டை விட மார்ச் மாத இறுதியில் 44% உயர்ந்துள்ளது. அதே சமயம் ராப்சீட் எண்ணெய் 72% உயர்ந்துள்ளது என்று சந்தை தரவு நிறுவனமான Mintec Ltd தெரிவித்துள்ளது. சோயாபீன் எண்ணெயின் விலை 41% உயர்ந்துள்ளது, பாமாயில் 61% அதிகரித்துள்ளது.
கடும் உயர்வு
ஆலிவ் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்தும் மார்ச் மாத இறுதியில் அதிக விலையை எட்டியதாக மின்டெக் கூறுகிறது. பிப்ரவரி மாதத்தில் 125 ரூபாயாக இருந்த சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நல்லெண்ணெய் தற்போது 250 ரூபாய்க்கும் , 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடலை எண்ணெய் தற்போது 220 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் 160 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் எண்ணெய் தற்போது 200 ரூபாய்க்கும், 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரீஃபைண்ட் ஆயில் தற்போது 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
காரணம் என்ன?
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உக்ரைன் போருக்கும் சூரியகாந்தி எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். அதற்கான காரணம் கண்டிப்பாக உண்டு. இந்திய நாட்டின் ஒட்டுமொத்த சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் கருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து தான் இந்தியாவுக்கு 90 சதவீத எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
விதைகள் இல்லாமல் தவிப்பு
சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு ஆலைகள் பலவும் தற்போது சூரியகாந்தி விதைகள் இல்லாமல் தவித்து வரும் நிலையில் ஏற்றுமதி இறக்குமதியில் பலத்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவினங்கள் அதிகரித்து உள்ளதும் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.