மதுரை: மதுரை, காளவாசல் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் வந்தால் மட்டும் ஒன்றிய அரசு கச்சத்தீவு குறித்து வாய் திறக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. வக்பு மசோதா மூலம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பது தான், இந்தியாவில் வசிக்கும் இந்து மக்களிடம் வாக்குகளை குவிக்கும் என்ற நிலைப்பாட்டில் பாஜ இருந்தால் அது அரசாட்சி முறையாக இருக்காது.
இது ஜனநாயக நாடு. இந்திய நாட்டின் விடுதலைக்கு போராடியவர்கள் தற்போது பாகிஸ்தான், வங்கதேச நாட்டில் உள்ளனர். விடுதலைக்கு போராட்டமே செய்யாதவர்கள் பாஜவிலும், பாராளுமன்றத்திலும் உள்ளனர். நாங்கள் யாருடனும் கூட்டணி குறித்து பேச மாட்டோம். மக்களுடன் தான் கூட்டணி.
நாய் மாதிரி திரிந்து, நாலு வீட்டில் நக்கி பிழைப்பதற்கு பதில், சிங்கம் மாதிரி கர்ஜித்து கொண்டும், புலி மாதிரி காட்டில் திரிந்து வேட்டையாடி பிழைப்பது போல் நான் புலி மாதிரி இரை தேடிக்கொள்வேன். கூட்டணிக்கு போனால் நான் எஜமான் சொல்வதுபோல் கேட்க வேண்டும். நான் தனித்து நின்று நானே எஜமானாக இருந்து கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
The post இரை தேடி வேட்டையாடுவேன் நாய் மாதிரி நாலு வீட்டில நக்கி திரிய மாட்டேன்…. சீமான் ரோஷம் appeared first on Dinakaran.