செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்ட் கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்றது. 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் வெஸ்லி சோ, பேபியானோ கருனா ஆகியோர் தலா 5.5 புள்ளிகளை பெற்றனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தில் பேபியானோ கருனாவை வீழ்த்தினார்.
ஆனால் அடுத்த ஆட்டத்தில் வெஸ்ஸி சோவிடம் தோல்வி அடைந்தார். வெஸ்லி சோ தனது 2-வது டை பிரேக்கர் ஆட்டத்தில் பேபியானோ கருனாவுடன் டிரா செய்தார். இதனால் வெஸ்லி சோ 1.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். பிரக்ஞானந்தா 2-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார். இந்த தொடரில் 2-வது இடம் பிடித்ததன் மூலம் பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.