கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான லசித் எம்புல்தெனியா 2 வருடங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். கடைசியாக லசித் எம்புல்தெனியா கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். தென் ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி டர்பனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5-ம் தேதி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெறுகிறது.