ராமேசுவரம்: இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்காக பணிகள் ராமேசுவரத்தில் தொடங்கப்பட்டு உள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு, தனுஷ்கோடியிலிருந்து 1914-ஆம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டு டிசம்பரில் தனுஷ்கோடியை புயல் தாக்கிய பிறகு, 1965-ஆம் ஆண்டிலிருந்து ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. ஆனால், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் இந்த கப்பல் சேவை 1981-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.