மதுரை: இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் குறைந்துள்ளது. இளைஞர்களை அரசியல் பக்கம் ஈர்க்க புதிய யுக்திகளை கையாள வேண்டும் என அதிமுக ஐடி பிரிவுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை கூறினார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் "இணையத்தில் இலையின் குரல்" என்ற தலைப்பில் திறமையான பேச்சாளர்கள் தேடுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மண்டலம் வாரியாக நடத்தப்படும் இந்த நிகழ்வில் 82 கட்சி மாவட்டங்களுக்குமான காணொளியில் பேசும் திறமை உள்ளவர்கள், அதிமுக கொள்கைகளை எடுத்துரைக்கும் திறமை உள்ளவர்கள், சமூக வலைதளத்திற்கு ஏற்ப எழுதும் திறமை உள்ளவர்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளை நேர்காணல் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.