சென்னை: “இவன்தான் அந்த சார்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டு வருகின்றனர். சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர். அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை பாதுகாத்து, தப்பிக்க முயற்சித்த அதிமுக பிரமுகர் சுதாகர் கைதானது குறிப்பிடத்தக்கது. அதிமுகவினருக்கு பதிலடியாக திமுக எம்.எல்.ஏ.க்கள் இவன்தான் அந்த சார் என்று அதிமுக நிர்வாகி படத்துடன் பதாகை ஏந்தி உள்ளனர் .
The post இவன்தான் அந்த சார்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம்..!! appeared first on Dinakaran.