தி ஹேக் (நெதர்லாந்து): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் கிளிர்ச்சியாளர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலியர்கள் உள்பட சிலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். பிணைக் கைதிகளில் சொற்பமானவர்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், காசா மீது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீதான தாக்குதல் ஹமாஸ் ஆதரவு அமைப்புகள் மீது நீண்டுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாக்கள், சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3,500-ஐ கடந்துள்ளது.