வாஷிங்டன்: இஸ்ரேல், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 20 அம்ச திட்டத்தை முன்வைத்தார்.