நாகர்கோவில்: விண்வெளித் துறையில் இந்தியா மேலும் பல சாதனைகளை படைக்கும் என சொந்த கிராமத்தில் மக்களின் பாராட்டு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசினார்.
இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி வி.நாராயணன் கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவிலை அடுத்துள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தை சேர்ந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மேலக்காட்டுவிளையில், ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மேலக்காட்டுவிளை ஊர் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.