தெஹ்ரான்: இஸ்ரேலுடனான போருக்கு பின்னர் முதல்முறையாக ஈரானின் சுப்ரீம் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பொதுவெளியில் தோன்றினார்.கடந்த மாதம் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. 12 நாட்கள் போர் நீடித்த நிலையில்,ஈரானின் 3 அணு சக்தி தளங்களின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று கொண்டதால் சண்டை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இஸ்ரேலுடன் நடந்த போரின் போது ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி தலைமறைவானார். அவர் பதுங்கு குழியில் மறைந்து இருப்பதாக கூறப்பட்டது.
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த சில மணி நேரங்களில் அயத்துல்லா அலி காமெனி பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இமாம் ஹூசேன் மரணமடைந்த ஆண்டு நிறைவு நிகழ்ச்சி தெஹ்ரானில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அயத்துல்லா அலி காமெனி கலந்து கொண்டார். இஸ்ரேல் ஈரான் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய நாளிலிருந்து அயத்துல்லா அலி காமெனி பொதுவெளியில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஈரான்-இஸ்ரேல் போருக்கு பின்னர் முதல்முறையாக பொது வெளியில் தோன்றிய அயத்துல்லா அலி காமெனி appeared first on Dinakaran.