கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக, ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கூறியுள்ளார்.
கோவையில் ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா, ஈஷா தன்னார்வலர் கணேஷ் ரவீந்தரன் மற்றும் சரவணன் ஆகியோர் இன்று (பிப்.22) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சுவாமி பாரகா கூறியது: “பாரத ஆன்மிக மரபில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மகா சிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே மனிதர்களின் உயிர் சக்தி மேல்நோக்கி எழுவதற்கு உதவும் வகையில் இருக்கின்றது.