லக்னோ: உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில், பாஜக 6 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், சமாஜ்வாதி வெறும் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, இந்த முடிவுகள் பாஜகவுக்கு எழுச்சியாகவும், சமாஜ்வாதிக்கு சரிவாகவும் கருதப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் பாஜகவுக்கு 33 மட்டுமே கிடைத்தன. இண்டியா கூட்டணியில் சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 தொகுதிகளில் வென்றன. இதனால் உ.பி.யில் ஆளும் பாஜகவுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டதாக பேச்சுக்கள் எழுந்தன. எனவே, 2027 சட்டப்பேரவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாக 9 தொகுதிளுக்கான இடைத்தேர்தல் கருதப்பட்டது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் எதிர்காலமும் இருந்தது.