உத்தர பிரதேசத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. ஒரு வாக்குச் சாவடியில் வாக்காளர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை பரிசோதிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சிலரை வாக்களிக்க விடாமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சமூக வலைதளத்தில் புகார் செய்திருந்தார்.
இந்தப் புகாரை மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் பரிசீலித்தனர். புகார் உண்மை என தெரியவந்ததால், தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, விதிகளை மீறிய போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து அவர்கள் நேற்று உத்தரவிட்டனர். முன்னதாக, தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.