புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழ்ந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.