வாஷிங்டன்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. புதினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய தரப்பில் அதிபர் புதின் உடன் வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், நிதியமைச்சர் அண்டன் சிலுன்னோவ் மற்றும் 2 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.