கீவ்: இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும் நிபந்தனைகளை முன்மொழிந்து, ரஷ்ய அதிபர் புதின் சூழ்ச்சி செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது, போர் நிறுத்த யோசனைக்கு பதில் அளிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் புதினின் முன்தீர்மானிக்கக்கூடிய சூழ்ச்சியான பதிலைக் கேட்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில், அதை நிராகரிக்கக் கூட அவர் தயாராகலாம். உண்மையில், ரஷ்யா இந்தப் போரைத் தொடர விரும்புவதாகவும், உக்ரேனியர்களை தொடர்ந்து கொன்று குவிக்க விரும்புவதாகவும் ட்ரம்பிடம் அவர் நேரடியாகச் சொல்ல அஞ்சுகிறார். அதனால்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா முன்நிபந்தனைகளுடன் அணுகி, முடிந்த வரை அதைத் தமாதப்படுத்தவோ அல்லது நீர்த்துப்போகச் செய்யவோ நினைக்கிறது.