வேலூர்: வட தமிழ்நாட்டின் ஜீவநதியான பாலாறு கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழிகளில் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதனால், பாலாற்றின் வளம் சீரழிக்கப்பட்டு நஞ்சாக மாறியுள்ளது. முன்னொரு காலத்தில் பாலாற்றால் செழித்தோங்கிய வாழை, கரும்பு, தென்னை, நெல் உற்பத்தி சுருங்கி விவசாயத்தை விவசாயிகள் மறக்கச் செய்து விட்டன.
இது ஒரு வகையிலான திட்டமிட்ட சுற்றுச்சூழல் சீரழிப்பு என்றே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உரக்க கூறி வருகின்றனர். இதற் கெல்லாம். செவி கொடுக்காத அரசு இயந்திரத்தை சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.