டெல்லி : உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் விமர்சனத்துக்கு வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். நீதித்துறையின் சுதந்திரத்தை வலுவற்றதாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்று ரவிக்குமார் எம்.பி. குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஜெகதீப் தன்கர் தற்போது வெளிப்படையாகவே விமர்சிக்கிறார் என்றும் ஜெகதீப் தன்கரின் கருத்து அனைத்து ஜனநாயக சக்திகளாலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும் என்றும் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
The post உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த துணை ஜனாதிபதியின் விமர்சனத்துக்கு வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் எதிர்ப்பு appeared first on Dinakaran.