உடல் எடையைக் குறைப்பதற்காக அதிக உணவு கட்டுப்பாட்டு எடுத்துக்கொண்டு `டயட்'டில் இருந்த 18 வயதான கேரள இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா(18). இவர் சற்று அதிகமான உடல் எடையுடன் இருந்தார். இதனால் இன்டர்நெட், சமூக வலைதளங்களில் வரும் உடல் எடைக் கட்டுப்பாடு வீடியோக்களைப் பார்த்து `டயட்'டில் இருந்தார்.