சென்னை: உடல்வலி நிவாரண மாத்திரைகைளை போதைப் பொருளாக விற்பனை செய்து வந்த மும்பையைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளர்.
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை போலீஸார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். அப்படையினர், காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பூக்கடை போலீஸார் நேற்று முன்தினம் காலை சென்னை, மெமோரியல் ஹால் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கண்காணித்தனர்.