உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு, ஒரு நாளுக்கு இவ்வளவு வாகனங்களைத்தான் அனுமதிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இ பாஸ் வழங்கப்படும் என்பதால், இந்த ஆண்டு கோடை சீசனுக்கு நினைத்த நேரத்தில் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.