சென்னை: “உதயநிதியை முதல்வராக்கும் திமுகவின் கனவு பலிக்காது” என்று நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசிய நிலையில், “துணை முதல்வர் உதயநிதியைப் பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார்” என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கூறியுள்ளார்.
இது குறித்து ஆ.ராசா எம்.பி. வெளியிட்ட அறிக்கையில், “திருநெல்வேலி பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வந்த ஒன்றிய உள்துறை அமித் ஷா, டெல்லியில் இருந்து எதையும் கொண்டு வரவில்லை. வழக்கம் போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். திராவிட மாடல் அரசைக் குறை கூறுவதற்கு எதுவும் கிடைக்காமல், ஏற்கெனவே கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பொய்களைப் பேசிச் சென்றிருக்கிறார்.