மதுரை: தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையை சந்தித்து வருகின்றனர். காவலர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஏராளமான காவலர்கள் புகார் அளித்து வருகின்றனர்.