மதுரை: உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலில் எவ்வகையிலும் வழிபாட்டுக்கு தடை விதிக்கக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. அனைத்துச் சமூகத்தினரும் வேறுபாடின்றி கோயிலில் வழிபடலாம் என்று ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுவர் எழுப்பி தடுத்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது, மனங்கள் இணைந்தால்தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலில் எவ்வகையிலும் வழிபாட்டுக்கு தடை விதிக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.