*சரி செய்ய நிரந்தரமாக போலீசார் நியமிக்க கோரிக்கை
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் நிரந்தரமாக நிழற்குடை அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் பைபாஸ் ரவுண்டானா, குமுளி, கம்பத்திலிருந்து தேனி மற்றும் சின்னமனூர், போடி, தேவாரம், ராயப்பன்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட ஊர்களிலிருந்து வரும் பேருந்துகள் பழைய பைபாஸ் சாலை வழியாக செல்கின்றன. இங்கு ரவுண்டானா அமைந்துள்ளது.
மேலும், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம், எஸ்.டி.ஓ.அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், கல்லூரி, பள்ளிகள் போன்றவை இருக்கக்கூடிய முக்கியமான நகரமாக உள்ளது. இங்கு எப்போதும் போக்குவரத்து நெருக்கடி உள்ளதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தமபாளையம் பைபாஸ் ரவுண்டானா அருகே நேற்று தேனி எஸ்.பி விழிப்புணர்வு பேரணி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்தார். இதனை அடுத்து கம்பம் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இங்கு நிரந்தரமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நிழற்குடை அமைக்கவும், சிக்னல் அமைக்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் சிவாஜி கூறுகையில், தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகா தலைநகரமாக உள்ளது. இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
குறிப்பாக பழைய பைபாஸ் ரவுண்டானா வழியே அதிகமான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து பிரச்சனை உள்ளது. இங்கு நிழற்குடை அமைத்து நிரந்தரமாக போக்குவரத்து போலீசாரை பணியில் நியமிக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சென்று வரவும் பள்ளி வாகனங்கள் விபத்தின்றி சென்று வரவும் முடியும் என்றார்.
The post உத்தமபாளையத்தில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி appeared first on Dinakaran.