சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை எளிதாக விசாரிக்கும் வகையில் டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய டிஜிட்டல் ‘வாய்ஸ் – ரெககனேஷன்’ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தீர்ப்புகளை விரைவாகப் பெற முடியும் என மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 75. இதில் தற்போது தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுடன் சேர்த்து மொத்தம் 65 நீதிபதிகள்பணியில் உள்ளனர். 10 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.