சென்னை: உயர்கல்விக்கு தடையாக இருப்பது ஆளுநர் ஆர்.என்.ரவிதான் என்று அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். பேராசிரியர், துணைவேந்தர் நியமனம் உள்பட அனைத்தையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஆளுநர் தடுப்பதாக புகார் தெரிவித்தார். பெரும்பான்மை மிகுந்த ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களை ஆளுநர் தன்வசப்படுத்தி ஒருதலைப்பட்சமாக நடக்கிறார். உயர்கல்வியில் ஆளுநர் போடும் தடைகளை உடைப்போம் என்று அமைச்சர் கோவி.செழியன் உறுதி அளித்தார்.
The post உயர்கல்விக்கு தடையாக இருப்பது ஆளுநர்தான்: கோவி.செழியன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.