உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்திருந்தது.
3-வது சுற்றில் குகேஷ் 37-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் இருவரும் தலா 1.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்று நடைபெற்றது. குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை காய்களுடனும் விளையாடினார்கள்.