தமிழ் செம்மொழி மற்றும் தமிழ் பண்பாட்டின் சிறப்பினை உலக தமிழ் இளைஞர்களிண் பரவச்செய்ய தமிழ்நாடு மட்டுமல்லாமல் இதர இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் உலக தமிழ் மையங்களில் பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கணினி தேர்வு முறையில் ‘ உலக தமிழ் ஒலிம்பியாட்’ போட்டி இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்.
உலக அளவிலான வெற்றியாளர்கள் மட்டுமல்லாமல் மாநில அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கான மொத்த பரிசு ரூ.1 கோடி வழங்கப்படும். தமிழ் செம்மொழியின் தொன்மையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வதற்காக அகரம்-மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலக தமிழ்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.
The post உலக தமிழ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு; தமிழ் செம்மொழியை அறிந்துகொள்ள அகரம்-மொழிகளின் அருங்காட்சியகம் appeared first on Dinakaran.