அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. பல்வேறு சிக்கல்களை கடந்து இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதல் காட்சியாக இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கப்பட்டது.