உலக நாடுகளில் உள்ள தமிழ் சுவடிகளை மின் பதிபாக்கம் செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், அரிய ஆவணங்கள் ஆகியவற்றை மின் பதிப்பாக்கம் செய்திடும் திட்டத்தை தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள அரசு அருங்காட்சியகங்களிலும், அந்நாடுகளின் தேசிய நூலகங்களிலும் பல்லாயிரக்கணக்கான பழம் ஓலைச்சுவடிகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.