புதுடெல்லி: டெல்லியில் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், உள்நாட்டு பொருட்களை மட்டுமே வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தலைநகர் டெல்லியின் சிவமூர்த்தி பகுதியில் இருந்து ஹரியானாவின் குருகிராம் வரை 29 கி.மீ. தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
இதில் ஹரியானாவுக்கு உட்பட்ட 19 கி.மீ. தொலைவு சாலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி எல்லைக்கு உட்பட்ட 10 கி.மீ. தொலைவு சாலை பணி ரூ.5,360 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. துவாரகா நெடுஞ்சாலை என்றழைக்கப்படும் இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.