சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று சென்னை கொளத்தூரில் பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.213.78 கோடியில் பெரியார் அரசு மருத்துவமனையின் மேம்படுத்தப்பட்ட புதிய உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: