சென்னை: தண்டராம்பட்டு பஞ்சாயத்து யூனியனில் முதல் கூட்டம் ஒன்றரை ஆண்டுகள் கழித்தே தொடங்கியது என்பதால் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டியைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலரான ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தண்டராம்பட்டு பஞ்சாயத்து யூனியன் தேர்தல் முடிவடைந்து தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒன்றரை ஆண்டுகள் ஆனது. அதன்பிறகே யூனியன் கூட்டம் நடைபெற்றது.