சென்னை: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என போக்குவரத்து ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.11 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. அந்தவகையில் 13-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. பல்வேறு காரணங்களால் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தாமதமாகிய நிலையில், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இறுதி செய்யப்பட்டது. அப்போது பேச்சுவார்த்தைக்கான அவகாசமும், 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.